கர்நாடக தேர்தல்... கணக்கில் வராத ரூ.83.42 கோடி பறிமுதல்...!!

கர்நாடக தேர்தல்... கணக்கில் வராத ரூ.83.42 கோடி பறிமுதல்...!!

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி இதுவரை 83 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார். 

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட சட்டபேரவைக்கு வரும் மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

 தொடர்ந்து நடத்தப்படும் வாகன சோதனையில் கோடிக்கணக்கான பணமும் போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்திய வாகன சோதனையில் 83 கோடியே 42 லட்சத்து 47 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கம்  மற்றும் 57 கோடியே 13 லட்சம் மதிப்பிலான மதுபானமும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார். மேலும் 16 கோடியே 56 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:நிறுத்தி வைக்கப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா...! அடுத்தது என்ன...?