தொடர் சரிவை சந்தித்து வரும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு...!

தொடர் சரிவை சந்தித்து வரும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு...!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க டாலர்:

உலக அளவில் பெரும்பாலான வர்த்தகப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர்களில் நடைபெறுவதால், அதற்கு இணையான மற்ற நாட்டின் கரன்சிகளின் மதிப்பு அதன் பொருளாதார சக்தியை நிர்ணயிப்பதாக இருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

தொடர் சரிவை சந்திக்கும் இந்திய கரன்சி:

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக அடிப்படை புள்ளியில் இருந்து வட்டி விகிதம் 75 புள்ளிகளாக அதிகரித்ததை அடுத்து, பெடரல் வங்கியின் வட்டி விகிதம் 3ல் இருந்து 3புள்ளி 25 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால் இன்று ஆசிய கரன்சிகளின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளன. அமரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 80 ரூபாய் 40 காசுகளாக சரிந்துள்ளது. இதேபோல் யூரோ உள்ளிட்ட பிற நாணயங்களும் சரிவை சந்தித்துள்ளன.  

இதையும் படிக்க: நீங்கள் சைவமா? வைணவமா? அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய ஆ.ராசா!

தேசிய பங்குச்சந்தையிலும் எதிரொலி:

இந்த ரூபாய் மதிப்பிழப்பு தேசிய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக எச்டிஎப்சி, விப்ரோ, டெக் மகிந்திரா, டாக்டர் ரெட்டீஸ், எச்சிஎல், சன் சர்மா உள்ளிட்டவற்றின் பங்குகள் சரிந்ததால்,  வர்த்தகம் தொடங்கியதும் சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்சக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் வரை சரிந்து 58 ஆயிரத்து 996 ஆக நிலைகொண்டது. இதேபோல்  தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 300 புள்ளிகள் வரை சரிந்து, 17 ஆயிரத்து 650 ஆக நிலை கொண்டுள்ளது.