வாடிக்கையாளர்களுக்கு SBI விடுத்த எச்சரிக்கை.. என்ன?

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு SBI விடுத்த எச்சரிக்கை.. என்ன?

இந்தியாவில் இருக்கும் பெரிய வங்கியில் ஒரு வங்கியான SBI, தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் மோசடி தற்போது அதிகஅளவில் பெருகி வருகிறது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை இழக்க கூடாது என பல வங்கிகள் பல முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது, SBI வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரியாத மூலங்களிலிருந்து வரும் செய்திகளை சரிபார்த்த பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ இந்த செய்தியை வாடிக்கையாளர்களுக்காக #SafeWithSBI என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளது.

எஸ்எம்எஸ் மூலம் தேவையில்லாமல் யாருக்கும் தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தொலைபேசி அழைப்பு அல்லது செய்தி மூலம் வங்கியுடன் தொடர்பில்லாத ஒருவர் உங்களிடம் ஏதேனும் உங்களது விவரங்கள் குறித்து கேட்டால் அதை கூற வேண்டாம் என தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் ஐடியைப் பெறுவதற்கு ஒருபோதும் மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் அனுப்புவதில்லை என்று எஸ்பிஐ வங்கி குறிப்பிட்டுள்ளது.