சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடைதிறப்பு...

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடைதிறப்பு...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இதன்படி, மார்ச் 14ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

மறுநாள் அதிகாலையில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 19-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு, மாா்ச் 26-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். பக்தர்கள் எப்போதும் போல சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருகை தரலாம் தகவலளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை...