"போராட்டம் வாபஸ் என்ற தகவலில் உண்மையில்லை" சாக்ஷி மாலிக்!

நீதி கிடைக்கும் வரை போராடுவோம் - சாக்ஷி மாலிக்

"போராட்டம் வாபஸ் என்ற தகவலில் உண்மையில்லை" சாக்ஷி மாலிக்!

பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சர்வதேச போட்டியில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அனைவரும் கூட்டாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சாக்ஷி மாலிக், வினேஷ் பொகாட், பஜ்ரங் புனியா ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். Sakshi Malik Pulls Out Of Wrestlers' Protest? Athlete's Visit to Railway  Job Sparks Speculation

இதைத்தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு ரயில்வே வேலைக்குத் திரும்புவதாக தகவல்கள் வெளியானது. இதனை முற்றிலும் மறுத்த சாக்ஷி மாலிக், நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கப் போவதில்லை எனவும், போராட்டத்துடன் இணைந்தே தனது ரயில்வே பணியை தொடர்வதாகவும் ட்வீட் செய்துள்ளார். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க:பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க போராட்டம்!