உத்தரபிரதேச தேர்தல் - வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 159 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேச தேர்தல் - வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 159 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா சட்டசபைகளுக்கு, பிப்ரவரி 10 ஆம் தேதி துவங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது.

அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சி 159 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கட்சி தலைவர் அகிலேஷ் மெயின்பூரி மாவட்டம் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிறையில் உள்ள அசம்கான், அவரது மகன் அப்துல்லா அசம்கான் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.  சமாஜ்வாதி கட்சி குண்டர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com