போதை பொருட்களை தடுத்து நிறுத்துமா சமுத்ராகுப்த்...?!

போதை பொருட்களை தடுத்து நிறுத்துமா சமுத்ராகுப்த்...?!

25 ஆயிரம் கோடி மதிப்புள்ள பலவிதமான போதைப் பொருட்களை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், கடலோர காவல் படை அதிகாரிகளும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆப்ரேஷன் சமுத்ராகுப்த் என்கிற திட்டம் மூலமாக கடந்த ஆண்டு முதல் போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது.  தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு இந்தியாவிலேயே இந்த ஆபரேஷன் திட்டம் மூலம் அதிக அளவு கோடி ரூபாய் போதை பொருட்களை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கடலோர காவல்படை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து ஆபரேஷன் சமுத்ராகுப்த் என்கிற திட்டம் மூலம் சோதனையில் ஈடுபட்டார்கள்.  

இந்த சோதனையில் தனியாக சென்ற பெரிய கப்பலில் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 134 மூட்டைகளை கொண்ட பலவிதமான போதைப் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனை அடுத்து கப்பலில் சோதனை செய்தபோது 3200 கிலோ மெத்தபட்டமைன் போதை பொருட்களும், 500 கிலோ ஹெராயின், 529 கிலோ ஆசிஷ் போதைப் பொருட்களை போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கனவே ஆபரேஷன் சமுத்ராகுப்த் திட்டம் மூலமாக குஜராத் கடற்பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 529 கிலோ ஆசிஷ் என்கிற போதை பொருள், 221 கிலோ மெத்தப்பட்டமைன், 13 கிலோ ஹெராயின் ஆகியவற்றை பறிமுதல் செய்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலத்தில் 200 கிலோ உயர் ரக ஹெராயின் கடத்திய 6 ஈரானியர்களை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதேபோன்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கை மற்றும் மாலத்தீவு பகுதிகளில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கடற்படை காவல் அதிகாரிகளும் நடத்திய சோதனையில் 19 போதைப் பொருள் கடத்துபவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 286 கிலோ ஹெராயின் 128 கிலோ மெத்தப்பட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  

இந்த நிலையில் சமுத்திரகுப்த் என்கிற ஆபரேஷன் மூலமாக இந்தியாவிலேயே இதுபோன்று பல்லாயிரக் கோடிக்கணக்கில் போதை பொருளை பறிமுதல் செய்தது இதுவே முதல்முறை எனவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி அழிப்பதற்கு ஆணை பெற இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கோடி கணக்கிலான போதை பொருட்கள் எப்படி இந்தியாவுக்குள் நுழைகிறது என்பது தொடர்பாகவும் இதற்கு அந்நிய நாட்டில் இருந்து உதவி புரியும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க:   மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் ... நடிகை நமீதா!!