6, 7, 8 வகுப்புகளுக்கு செப்., 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

கர்நாடகாவில் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான வரும் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

6, 7, 8  வகுப்புகளுக்கு செப்., 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

கர்நாடகாவில் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான வரும் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த 23-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திற்கு கீழ் உள்ள தாலுகாக்களில் மட்டுமே இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் எனவும் ஒரு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.