இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

கர்நாடகத்தில் இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

கர்நாடகத்தில் இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து 5 மாதங்களுக்கு பிறகு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி திறக்கப்பட்டது. இதற்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கர்நாடக அரசு, 2-வது கட்டமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் இன்று  6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், வகுப்பறையில் 50 சதவீத குழந்தைகளை மட்டுமே உட்கார வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதலில் அரசு கூறியுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.