உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?யு.யு.லலித் யாரை பரிந்துரைத்தார்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?யு.யு.லலித் யாரை பரிந்துரைத்தார்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு டி.ஓய். சந்திரசூட் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித் பரிந்துரைத்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?:

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யுயு லலித்-இன் பதவிக்காலம், நவம்பர் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அப்பொறுப்புக்கு புதிய நீதிபதி ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் லலித்திடம் கேட்டிருந்தது.  

இதையும் படிக்க: ஆ. ராசா வழக்கு: ஏழு வருடத்திற்கு பிறகு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை...!

அதன்படி உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட்டை நியமிக்கும்படி யுயு லலித் பரிந்துரைத்து, அது தொடர்பான கடிதத்தை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று சமர்பித்தார். இதற்கு அனைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பரிந்துரை கடிதம் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்திரசூட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அவர் 2 ஆண்டுகள் அப்பொறுப்பில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.