சிவசேனாவும் பாஜகவும் மீண்டும் இணையுமா..? தேவேந்திர ஃபட்னாவிஸ் விளக்கம்...
பாஜக-சிவசேனா எதிரிகள் அல்ல - தேவேந்திர ஃபட்னாவிஸ்

மத்திய பிரதேசம், ராஜஸ்தானுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அங்கு நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இதையும் படிக்க : ஆசிய விளையாட்டு; இந்தியாவுக்கு ஒரேநாளில் 12 பதக்கங்கள்
ராஜஸ்தான் ஜோத்பூரில், சாலை, ரெயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறாா். இந்த திட்டங்களில் ஐஐடி ஜோத்பூர் வளாகமும் அடங்கும்.
அதேநேரத்தில் நகர விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் சாலை, ரயில், எரிவாயு குழாய், வீட்டு வசதி மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற துறைகளில் 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மாண்ட்லா, ஜபல்பூர், திண்டோரி, சியோனி ஆகிய மாவட்டங்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளாா்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கி பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு, வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இதையும் படிக்க : சென்னை: இணையதளம் இயங்காததால் தாமதமான விமான சேவை!
அந்தவகையில், பிரதமர் மோடி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரசுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த மாநில கட்சிகளும் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டுக் கோயில்கள் தமிழ்நாடு அரசால் ஆக்கிரமிக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திறந்த வாகனத்தில் பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு செய்துள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும், முதலமைச்சர் சந்திர சேகர ராவ் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் சாடினார். உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னை அணுகியதாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் மோடி கூறினார்.
தமிழ்நாட்டுக் கோயில்கள் மாநில அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தமிழ்நாடு அரசுடன் பேசி ஆலயங்களை விடுவிக்குமா? என கேள்வியெழுப்பினார். மேலும், ஆலயங்களின் சொத்துக்கள், வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் பிரதமர் சாடினார். ஆலயங்களை மாநில அரசே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க:“மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
”கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 9 வார காலமாக ஊதியம் கொடுக்கப்படவில்லை. அன்றாட தேவைக்கு கூட பணம் இல்லாமல் சிரப்படுவதாகவும், மத்திய அரசும், சம்மந்தப்பட்ட அமைச்சரும் இதில் தலையிட்டு அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”, என்றார்.
மேலும், ”தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார். மத்திய அரசு மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது நமது உரிமை”, என்றார்.
தொடர்ந்து, ”பாஜக அரசும், பாஜக மாநில தலைவரும் ஊடகங்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர், டெல்லி நியூஸ் கிளிக் ஊடகவியலாளர் வீட்டில் சோதனை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பெண் பத்திரிகையாளரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடந்த கொண்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. இதனை கண்டிக்கிறேன்”, என்றார்.
நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின் எதிரொலியாக டெல்லி உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நேபாளத்தில் 4.6 என்ற ரிக்டர் அளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் முதலாவதாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 6.2 என்ற ரிக்டர் அளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் தெற்கு டெல்லி, என்.சி.ஆர் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் சாலையில் தஞ்சமடைந்தார்.
நேபாள நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஹரியானாவின் குருகிராம், ராஜஸ்தானின் ஜெய்பூர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து கொண்டு சாலையில் குவிந்தனர்.
உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, ஹாபூர், அம்ரோஹா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!