எல்லை ராணுவ முகாமில் அதிர்ச்சி சம்பவம்.. 2 பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்!!

எல்லை ராணுவ முகாமில் அதிர்ச்சி சம்பவம்.. 2 பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்!!

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்

ரஜோரியில் உள்ள ராணுவ முகாமில் வேலியைத் தாண்டி ஒருவர் கடக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது அங்கு ராணுவ வீரர்கள் அருகில் சென்று சோதனையிட்ட போது, மறைந்திருந்த இரு பயங்கரவாதிகள் உடலில் வெடிமருந்தை கட்டிக்கொண்டு தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு, 3 ராணுவ வீரர்கள் வீர மரணடைந்தனர்.

ராணுவ வீரர்களுக்கு மக்கள் அஞ்சலி

தொடர்ந்து அப்பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஜோரியைச் சுற்றி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.