கர்நாடகா மாநில கொடியை ஏந்திய மாணவன்...ட்வீட் போட்ட கர்நாடக முன்னாள் முதலமைச்சர்!

கர்நாடகா மாநில கொடியை ஏந்திய மாணவன்...ட்வீட் போட்ட கர்நாடக முன்னாள் முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

லண்டனில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கர்நாடகா மாநில கொடியை கையில் ஏந்தி காண்பித்த ஆதிஷ் ஆர் வாலியின் வீடியோவை கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கர்நாடகா மாநில கொடியை காண்பித்த மாணவன் :

லண்டனில் நடைப்பெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்தியாவை சேர்ந்த ஆதிஷ் ஆர் வாலி என்ற மாணவர் தன்னுடைய எம் எஸ் பட்டப்படிப்புச் சான்றிதழை மேடையில் வாங்கும்போது, கர்நாடக மாநில கொடியை கையில் ஏந்தி காண்பித்தார். பின்னர் இதுகுறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆதிஷ் ஆர் வாலி, “ நான் லண்டன் பல்கலைக்கழகத்தில் ள்ள மேலாண்மை துறையில் பட்டம் பெற்றிருப்பதாகவும், அந்த விழாவில் கர்நாடகா மாநில கொடியை கையில் ஏந்தி காண்பித்ததாகவும், அது ஒரு பெருமித தருணம் என்றும் பதிவிட்டிருந்தார்.

ட்வீட் செய்த சித்தராமையா :

தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலகி வரும் நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், லண்டனில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆதிஷ் ஆர் வாலி கர்நாடகா மாநில கொடியை கையில் ஏந்தி காண்பித்தது அனைத்து கன்னடர்களுக்கும் ஒரு பெருமை சேர்க்கும் தருணம் என்று பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com