நீதி வேண்டி நீதிமன்றம் சென்ற பாம்பு....

நீதி வேண்டி நீதிமன்றம் சென்ற பாம்பு....

நீதிமன்றத்தில் நீதிக்காகவோ அல்லது தண்டனைக்காகவோ மக்கள் செல்வதைக் காணலாம். ஆனால் நீதிமன்றத்தில் முதல் முறையாக, ஒரு பாம்புக்கு நீதிபதியின் வழியாக பாதுகாப்பும் நீதியும் கிடைத்துள்ளது. இந்த ஆச்சரியமான வழக்கு பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி சதீஷ் சந்திர ஜா முன்பு நீதிமன்றத்தில் ஒரு கொள்கலனில் இரண்டு தலை கொண்ட பாம்பு ஆஜர்படுத்தப்பட்டது.

இரண்டு தலை கொண்ட பாம்பு பெரும்பாலும் ராஜஸ்தானில் காணப்படுகிறது.  இந்த வகையான பாம்பின் பெயர் ரெட் சாண்ட் போவா. சர்வதேச சந்தையில் இந்த பாம்பின் விலை பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது.  இது பெரும்பாலும் பூச்சிகளையும் எலிகளையும் வேட்டையாடுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  சீனா போன்ற நாடுகளில் இந்த வகை பாம்புகளின் தேவை அதிகம் இருப்பதால் அதிக அளவில் வேட்டையாடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த அரிய வகை பாம்பை குறித்து முழுமையாக அறிந்து கொண்ட நீதிபதி சதீஷ் உடனடியாக அதனை பாதுகாப்பில் எடுத்து, கவனமாக பராமரிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதையும் படிக்க:   உடல் தகுதி தேர்வில் விக்குடன் வந்த போட்டியாளர்கள்....எதற்காக?!!