காங்கிரஸ் நிறுவன தினத்தில் ராகுலை செல்லமாக கோபித்த சோனியா காந்தி!!!

காங்கிரஸ் நிறுவன தினத்தில் ராகுலை செல்லமாக கோபித்த சோனியா காந்தி!!!

சோனியா காந்தி மற்றும் அம்பிகா சோனி இடையேயான உரையாடலின் போது, ​​ராகுல் காந்தி அவரது தாயாரான சோனியா காந்தியுடன் அழகான தருணங்களைச் செலவிட்டதைக் காணலாம்.

காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை டெல்லி வந்தடைந்தார். இந்திய ஒற்றுமை பயணத்தில் தாயுடன் அரவணைப்பைக் காட்டிய பிறகு, ராகுல் இங்கே மிகவும் மகிழ்ச்சியான் மனநிலையில் காணப்பட்டார். 

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், குளிரின் போது டி-சர்ட் அணிவதன் ரகசியத்தை கூறியதுடன், நிகழ்ச்சியின் போது அவர் தனது தாய் சோனியா காந்தியுடன் சிரித்து விளையாடுவதையும் காண முடிந்தது. 

நிகழ்ச்சியின் போது தாயார் சோனியா காந்தியுடனான உரையாடலின் போது, ​​​​ராகுல் அவர் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரது முகத்தைப் பிடித்துக் கொண்டார்.  ஆனால், சோனியா அவரை திட்டி கையை விலக்கி விட்டார்.  இதன் போது, ​​காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி, ராகுல் மற்றும் சோனியா காந்தியுடன் பேசுவதையும் காண முடிகிறது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   காதலனைக் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!!!