
இந்தியா, சீனா இடையேயான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா கான்கிரீட் கட்டிடங்களை கட்டி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் இந்தியா இரவு பகல் பாராது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இக்கண்காணிப்பு பணியில் இஸ்ரேலிய தயாரிப்பான அதிநவீன ஹெரோன் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. திபெத்தின் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேசத்தை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் கான்கிரீட் கட்டிடங்களை அமைப்பது அச்சுறுத்தலை அதிகப்படுத்தியுள்ளது.