காஷ்மீரில் சிறப்பு காவல் அதிகாரி குடும்பத்துடன் சுட்டுக்கொலை,.! தீவிரவாதிகள் அராஜகம்.! 

காஷ்மீரில் சிறப்பு காவல் அதிகாரி குடும்பத்துடன் சுட்டுக்கொலை,.! தீவிரவாதிகள் அராஜகம்.! 

ஜம்மு காஷ்மீரில், சிறப்பு காவல் அதிகாரி, அவரது குடும்பத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு விமானப் படை தளத்தில் டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்  நிகழ்த்தியிருக்கும் அதே நேரத்தில், புல்வாமா பகுதியில் சிறப்பு காவல் அதிகாரி உள்பட அவரது குடும்பத்தை தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் ஹரிபரிகம் கிராமத்தில் அமைந்துள்ள சிறப்பு காவல் அதிகாரி ஃபயாஸ் அகமதுவின் வீட்டிற்குள் தீவிரவாதிகள் நேற்று இரவு அத்து மீறி நுழைந்து சிறப்பு காவல் அதிகாரி ஃபயாஸ் அகமது, அவரது மனைவி ராஜா பானோ மற்றும் மகள் ரஃபியா ஜான் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.  

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மூ காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, சிறப்பு காவல் அதிகாரி அஹ்மத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான மிருகத்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும், இது கோழைத்தனமான செயல் எனவும் சாடினார், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மிக விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறினார்.