75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் கண்கவர் விமான கண்காட்சி...

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் கண்கவர் விமான கண்காட்சி நடைபெற்றது. 

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் கண்கவர் விமான கண்காட்சி...

சுதந்திர இந்தியாவின் 75-வது தினத்தை முன்னிட்டு, அசாதி கா அம்ரித் மகோட்சவ்’ என்ற வெற்றி கொண்டாட்டத்தை மத்திய அரசு ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் அரசு மற்றும் இந்திய விமானப்படை இணைந்து ஸ்ரீநகரில் விமான கண்காட்சியை நடத்தியுள்ளது. "தல்" ஏரி பகுதியில் நடைபெற்ற இந்த கண்கவர் விமான சாகசங்களை சுமார் 3000 கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.

விமானப்படையின் படைத்திறனை மக்களுக்கு வெளிப்படுத்துவதே இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களை விமானப்படையில் சேர ஊக்கிவிக்கும் நோக்கில்  இந்த கண்காட்சியானது ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமானப்படையின் புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றுள்ள இந்த கண்காட்சியில் ஆகாஷ் கங்கா உள்ளிட்ட விமானங்கள் சாகசம் புரிந்தன.இந்திய விமானப்படையின் சாதனையை விளக்கவும், அத்துறையில் சேர்வதற்கான வழிக்காட்டு நெறிமுறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு வழங்கவும், அங்குள்ள சர்வதேச மாநாடு அரங்கில் ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன