இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் ஸ்புட்னிக் லைட்..!

ஒற்றை டோஸ் தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட்..!

இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் ஸ்புட்னிக் லைட்..!

இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசி, ஸ்புட்னிக் லைட் ஆகும். இது ஒற்றை டோஸ் தடுப்பூசி. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ், இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என தாங்கள் நம்புவதாகவும், அதற்காக இந்திய நிறுவனங்களுடன் தாங்கள் நன்றாக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்களின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பங்குதாரராக சீரம் நிறுவனம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் தடுப்பூசி பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.