வீடு (ம) கார் லோன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு - எஸ்பிஐ அதிரடி !

வீடு மற்றும் கார் லோன்களுக்கான வட்டி விகிதங்களை இந்திய ஸ்டேட் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது.

வீடு (ம) கார் லோன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு - எஸ்பிஐ அதிரடி !

வங்கிகளுக்கு இடையேயான ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 0.50 சதவீதம் அதிகரித்திருந்தது. இதனை தொடர்ந்து வீடு மற்றும் கார் லோன்களுக்கான வட்டி விகிதங்களை இந்திய ஸ்டேட் வங்கி-யான எஸ்பிஐ 0. 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களையும்  0. 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் இதன் மூலம் வீடு மற்றும் கார் லோன்களுக்கான வட்டி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்பு நிதிக்கான வட்டி அதிகரிப்பு கடந்த 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் மேலும் குறுகிய கால வைப்பு நிதி திட்டத்துக்கு இந்த வட்டி அதிகரிப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.