முன்னாள் முதலமைச்சர் கான்வாய் மீது கல்லெறிந்து தாக்குதல்.....

சிக்கிமில் முன்னாள் முதலமைச்சரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன.   இதனால் பலர் காயமடைந்துள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் கான்வாய் மீது கல்லெறிந்து தாக்குதல்.....

சிக்கிமின் முன்னாள் முதலமைச்சர் பவன் சாம்லிங் சிக்கிம் பச்சாவ் அபியானின் கீழ் தற்போதைய முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்கின் தொகுதியான போக்லோக் கம்ராங்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கான்வாய் மீது:

அப்போது அசங்தாங்கில் உள்ள ஷீரடி சாய் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, முன்னாள் முதலமைச்சர் பவன் சாம்லிங் நிகழ்ச்சி நடைபெறும் இடமான போக்லோக் கம்ராங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அசங்தாங் பள்ளி வளாகத்தில் பதுங்கியிருந்த ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.  முன்னாள் முதலமைச்சரின் கான்வாய் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.

காவல்துறை ஆதரவா?:

ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் சாலையின் அமர்ந்து அவர்கள் கட்சியின் கொடியுடன் சாலை மறியல் செய்தனர்.  கூட்டத்தை கட்டுப்படுத்த நாம்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாம்சி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கடும் முயற்சி மேற்கொண்டனர்.  வாகனத்தை நாசப்படுத்தியது தொடர்பாக நாம்சி காவல் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பியிருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்று எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட பயணி....