தெலுங்குதேசம் கட்சியினரின் கார்கள் மீது கல்வீச்சு

கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் கார்கள் மீது கல்வீச்சு.

தெலுங்குதேசம் கட்சியினரின் கார்கள் மீது கல்வீச்சு

 சித்தூர் மாவட்டம் புங்கனூர் அருகே தெலுங்கு தேசம், ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல்.இது என்ன தலையெழுத்து, நமது மாநிலத்திற்கு என்ற பெயரில் ஆந்திரா முழுவதும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி பொது கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறது.

மேலும் படிக்க | தன்னிடம் பிழையை வைத்துக்கொண்டு ராகுல் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியதேன்?

 இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூரில் இன்று நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு சென்று கலந்து கொள்வதற்காக தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரா ரெட்டி தலைமையில் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் ஆஇயோர் கார்களில் சென்று கொண்டிருந்தனர் பொங்கலூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார்கள் மீது ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கற்களை வீசி  தாக்குதல் நடத்தினர். நடைபெற்ற இந்த கல்வீச்சு சம்பவத்தில் தெலுங்கு தேச கட்சியினர் சென்ற கார்களின் கண்ணாடிகள் உடைந்தன.

மேலும் படிக்க | பேருந்து மீது லாரி மோதி விபத்து - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கோர விபத்து தவிர்ப்பு

 இதனால் இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.அங்கிருந்து போலீசார் இரு கட்சிகளின் தொண்டர்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக தெலுங்கு தேசம் கட்சியின் குற்றம் சாட்டி உள்ளனர்.