பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை கட்டாயமில்லை - மாநில அரசு அதிரடி உத்தரவு

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை கட்டாயமில்லை என மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே போக மறுபக்கம் அனைத்து பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில அமைச்சரும், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே, பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை கட்டாயமில்லை என்றும் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரிலேயே மாணவர்களின் வருகை அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  

மேலும் பள்ளிகளில் கொரோனா விதிகளை மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.