வீட்டையே விஷ வாயுக் கூடமாக மாற்றி தற்கொலை.. கதவு, ஜன்னல்கள், சிறு துளை கூட விடாமல் பாலிதீனால் அடைப்பு!!

டெல்லியில் ஒரு குடும்பம் வீட்டையே விஷ வாயுக் கூடமாக மாற்றி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டையே விஷ வாயுக் கூடமாக மாற்றி தற்கொலை.. கதவு, ஜன்னல்கள், சிறு துளை கூட விடாமல் பாலிதீனால் அடைப்பு!!

டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் மஞ்சு என்பவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில்  இன்று நீண்ட நேரமாக அவர்கள்  வீட்டிலிருந்து வெளியே வரததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது வீடு தாழிடப்பட்டிருந்ததுடன் ஜன்னல்கள் அனைத்தும் பாலிதீன் கவரால் மூடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது  கதவு அருகிலேயே சில குறிப்புத் தாள்கள் கிடந்தன. அதில் வீடு முழுக்க கார்பன் மோனாக்சைடு என்னும் விஷவாயு பரப்பி  தாங்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும்,  இது எளிதில் தீப் பிடிக்கும் என்பதால் கவனமாக உள்ளே வரவும் என எழுதியிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தகுந்த பாதுகாப்புடன் உள்ளே சென்று பார்த்தபோது தாயும் மகள்களும் இறந்து கிடந்தனர்.

அவர்களின் உடல்கள கைப்பற்றி  பொலீசார் நடத்திய விசாரணயைில் வீட்டிற்குள் நிலக்கரியை தீ வைத்துக் கொளுத்தி, சமையல் எரிவாயுவை திறந்து வைத்ததால் உருவான கார் மோனாக்சைடை சுவாசித்து  தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

எனினும் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாக கடந்த 2018 ஆம் ஆண்டு  டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது நச்சு வாயு புகை மூலம் தாய், இரு மகள்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.