"புதிய நாடாளுமன்றம் கட்டிடம்" பெருகும் ஆதரவு!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்து நிலையில், பிரதமருக்கு ஆதரவு தெரிவித்தும் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வரும் மே 28-ம் தேதி நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றம் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இத்திறப்பு விழாவை ஆம் ஆத்மி, இடது சாரியை கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற மங்களகரமான நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வைப் புறக்கணிப்பதாக உள்ளதாக விமர்சனம் செய்தார். மேலும், கட்சி பாகுபாடுகளை களைந்து அனைவரும் நிகழ்ச்சியில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஓடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம், பஞ்சாபின் அகாலிதளம் ஆகிய கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பில் கலந்து கொள்ளாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சா் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் "இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை" எனவும் "திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என கூறுபவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தமானவை" என கூறியுள்ளார்.
அடுத்ததாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானம் என்பது தேவையான ஒன்று எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க:"ராமேஸ்வரத்தில் அனுமதி இல்லாமல் பள்ளி எவ்வாறு செயல்படுகிறது" நீதிபதிகள் கேள்வி!