உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் யு. யு. லலித்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணாவின் பதவிகாலம் நிறைவடைவதையடுத்து யு.யு.லலித் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் யு. யு. லலித்

நீதிபதி உதய் உமேஷ் லலித் இன்று 49வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  லலித்-ன் நியமன ஆணையில் குடியரசு தலைவர் முர்மு கையெழுத்திட்டுள்ளார்.

யு.யு. லலித் ஆகஸ்டு 27 அன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அவர் பதவியேற்பதற்கு ஒருநாள் முன்பாக ரமணா பதவி விலகுவார்.

இந்திய அரசியலமைப்பின் 124 வது பிரிவின் பிரிவு (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி,  நீதிபதி உதய் உமேஷ் லலித்-ஐ ஆகஸ்டு 27 முதல் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார் என்று சட்ட அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி லலித் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே பதவியில்கொண்டிருப்பார். நவம்பர் 8ஆம் தேதி அவருக்கும் 65 வயது நிறைவடைகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வுபெறும் வயது 65.