சரணடைந்த பாகிஸ்தான் படைகள்.. வெற்றியடைந்த இந்தியா..!

சரணடைந்த பாகிஸ்தான் படைகள்.. வெற்றியடைந்த இந்தியா..!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஆண்டு தோறும் வெற்றி தினமாக (Victory Day) அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் கார்கில் வெற்றி தினம் புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது. கடற்கரையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன், துணை சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயலர், காவல் துறை உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து முப்படைகளின் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க: சதம் அடித்த ராகுல் காந்தி..! இன்று கோலாகல கொண்டாட்டம்..!