பாஜக தலைவர்களின் பேராசை... சுவேந்து அதிகாரி கடுமையான குற்றச்சாட்டு...

பாஜக தலைவர்களின் அதீத நம்பிக்கையே மேற்கு வங்க தேர்தல் தோல்விக்கு காரணம் என, அம்மாநில எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி சாடியுள்ளார்.

பாஜக தலைவர்களின் பேராசை... சுவேந்து அதிகாரி கடுமையான குற்றச்சாட்டு...
புர்பா மேடிநிபூர் மாவட்டத்தின் சந்திப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜக கட்சி கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தலில் 170லிருந்து 180 இடங்களை கைப்பற்றிவிடுவோம் என்ற பாஜகவினரின் அதீத நம்பிக்கை தான், களநிலையை புரிந்து கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இதன் காரணமாகவே பலர் களத்தில் இறங்கி பணியாற்றவில்லை என்றும், இதுவே பெருத்த தோல்விக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அடிமட்ட நிலையிலிருந்து இலக்கு நிர்ணயித்து செயல்படுவது தேர்தல் வெற்றிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது எனவும் சுவேந்து கூறியுள்ளார்.