போன் எண்ணை பகிர்வதற்கு முன் யோசியுங்கள்... நீங்களும் சிக்கலாம் என்ஐஏ விசாரணையில்!!

போன் எண்ணை பகிர்வதற்கு முன் யோசியுங்கள்... நீங்களும் சிக்கலாம் என்ஐஏ விசாரணையில்!!

கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரம் இல்லை:

கொடுங்கையூரிலுள்ள முகமது நியமதுல்லாஹ் என்பவர் வீட்டில் சோதனை நடத்தியதாகவும் அவரது
வீட்டிலிருந்து எந்த வித ஆதாரமும் கிடைக்காத நிலையில் போலீசார்திரும்பி சென்றனர் எனவும் அவரது செல்போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் முகமது நியமதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மூன்று மாநிலங்களில்:

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மூன்று மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமும் சோதனை நடைபெற்று வருவதாக  தகவல் கிடைத்துள்ள நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட முகமது நியமத்துல்லாஹ் பேட்டி அளித்துள்ளார்.

சோதனை செய்த என்ஐஏ:

சென்னை கொடுங்கையூர் தென்றல் நகர் 8வது தெருவில் வசித்து வருபவர் முகமது நியமத்துல்லாஹ் இவரது இல்லத்தில் 3 மணி நேரம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திச் சென்றுள்ளனர்.

விசாரணை:

சோதனைக்கு பிறகு முகமது நியமித்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பலமுறை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் மதம் சார்ந்த பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடும் என்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

எந்த அமைப்பிலும்:

குறிப்பாக எந்தவித அமைப்பையும் சாராமல் தனியாக மதப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதால் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன் எனவும் அவ்வாறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது பல்வேறு நபர்களை சந்திக்கும்போது அவர்களுடன் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.  அவ்வாறு என் செல்போன் என்னை வாங்கிய நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாகவே:

ஆனால் அதன் தொடர்ச்சியாகவே இது போன்ற விசாரணை நடத்தப்படுகிறது என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் ஆனால் நான் எந்தவித தடை செய்யப்பட்ட அமைப்புடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில் இல்லை எனவும் கூறியுள்ள முகமது தீவிரவாத செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.  எனவே எத்தனை முறை சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு தருவேன் எனவும் இன்று ஏழு அதிகாரிகள் 3 மணி நேரம் சோதனை நடத்தி சென்றுள்ளனர் எனவும் எனது செல்போனை மட்டும் வாங்கிச் சென்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் என்னிடமிருந்து வேறு எந்த வித ஆவணத்தையும் பறிமுதல் செய்யவில்லை என்ற ஆவணத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்று விட்டனர் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:   நாடு முழுவதும் தொடங்கியது பொதுத்தேர்வு....