அவகாசத்தை மறுத்த அமலாக்கத்துறை...ஆஜரான டி.கே சிவக்குமார்!

அவகாசத்தை மறுத்த அமலாக்கத்துறை...ஆஜரான டி.கே சிவக்குமார்!

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. ஷிவகுமார் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜாராகியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் பங்குகளை  முறைகேடாக கையகப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி, எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், டி.கே. சிவகுமாரும் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதையும் படிக்க: மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!

டி.கே.சிவகுமார் தற்போது ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் இருப்பதால், அதைக்காரணம் காட்டி கூடுதல் அவகாசம் கோரியதாக தெரிகிறது.

ஆனால், அவர் கோரிய கூடுதல் அவகாசம் மறுக்கப்பட்டதால், ஷிவகுமார் நடைபயணத்தை பாதியில் விட்டு விட்டு, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.