தடுப்பூசி வீணடிக்காமல் கூடுதலாக செலுத்திய மாநிங்களில் தமிழகம் முதலிடம்!  

தடுப்பூசி வீணடிக்காமல் கூடுதலாக செலுத்திய மாநிங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தடுப்பூசி வீணடிக்காமல் கூடுதலாக செலுத்திய மாநிங்களில் தமிழகம் முதலிடம்!   

தடுப்பூசி வீணடிக்காமல் கூடுதலாக செலுத்திய மாநிங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா  இரண்டாம் அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழலில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்குமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறார்கள். தொடக்கத்தில் தடுப்பூசி அதிக அளவில் வீணாகி வந்த நிலையில் தற்போது தடுப்பூசி வீணாவதைத் தடுத்து கூடுதலாக தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த மே 1ஆம் தேதியிலிருந்து ஜூலை 13-ஆம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி வீணாவதை முற்றிலுமாக தடுக்கப்பட்டு தடுப்பூசி வந்த அளவை விட கூடுதலாக 5,88,243 தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து இருக்கிறது.

மற்ற மாநிலங்களைவிட தமிழகம் கூடுதலாக தடுப்பு ஊசியை செலுத்தி முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு தற்போது வரையிலும் 1,92,98,70 தடுப்பூசிகள் வந்திருக்கும் நிலையில் நேற்று வரையிலும் 1,91,50,418 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 5 லட்சத்து 88 ஆயிரம் தடுப்பு சுவர் கூடுதலாக போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதைப்போல இரண்டாமிடத்தில் உத்தரகாண்ட் மாநிலம் 4,87,547 தடுப்பூசிகளை கூடுதலாக போடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.