ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது.சுமார் 70 ஆயிரம் கோடி இழப்பில் ஏர் இந்தியா நிறுவனம் இயங்கி வந்தது. இதனால் விமானங்களை பமாமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்பட்டது.

 இதனால் அதனை தனியாருக்கு விற்பனை செய்யும் வகையில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பல்வேறு பெருநிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

 இதன் மூலம் 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது. ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் மத்திய அரசின் இரண்டாவது முய்ற்சி பலனளித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சி செய்தது.