தெலுங்கானா தலித் பந்து திட்டம் - பயனாளிகளை நேரடி ஆய்வில் சிந்தனைசெல்வன்

தெலுங்கானா தலித் பந்து திட்டம் - பயனாளிகளை நேரடி ஆய்வில் சிந்தனைசெல்வன்

தெலுங்கானா தலித் பந்து திட்டம் 

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சமீபத்தில் தலித் பந்து திட்டத்திற்கு ரூ.80000 கோடியிலிருந்து ரூ.1 லட்சம் கோடி வரை  செலவிட தயாராக இருப்பதாக தெரிவித்தார். நாட்டினுடைய மிகப்பெரிய நேரடி பணப் பரிமாற்ற திட்டமாகும்  தலித்களின் முன்னேற்றத்திற்கு முழுவதுமாக செயல்படுத்தபடும்.

We Got Telangana Because Of Dr BR Ambedkar, Says K Chandrasekhar Rao

தலிதா பந்து என்பது தெலுங்கானா அரசாங்கத்தின் சமீபத்திய முதன்மை திட்டமாகும். இது தலித் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான ஒரு நலத்திட்டமாக கருதப்படுகிறது, மேலும் அவர்களிடையே தொழில்முனைவோருக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் உதவுகிறது. இது, செயல்படுத்தப்பட்டால், இது நாட்டின் மிகப்பெரிய பண பரிமாற்ற திட்டமாக இருக்கும். இந்த தலிதா பந்து திட்டத்திற்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது என்பதே உண்மை.


சிந்தனை செல்வன்  ட்வீட்டர் பதிவு

தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்திலுள்ள உசாராபாத் சட்டமன்ற தொகுதியை நோக்கி இப்போது சென்று கொண்டிருக்கின்றோம்.தலித் பந்து திட்டத்தின் மூலம் இந்த சட்டமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 20000 களில் 18000 தலித் குடும்பங்களுக்கு ஒரு  குடும்பத்திற்கு 10 லட்சம் என முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பைலைட் திட்டமாக உசாராபாத் சட்டமன்ற தொகுதியை எடுத்துக் கொண்டு,தொகுதியில் உள்ள தகுதியுள்ள அனைத்து தலித் குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அந்த பயணாளிகளை பார்ப்பதற்கு இப்போது சென்று கொண்டுள்ளோம்.

தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்திலுள்ள உசாராபாத் சட்டமன்ற தொகுதியில் தலித் பந்து திட்டத்தின் மூலம்  பயனடைந்த  பயணாளிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தோம்.  உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.SS.பாலாஜி , மரியாதைக்குரிய அண்ணன் ரமேஷ் நாதன் மற்றும் சசி முருக்கப்பன்.