
மின்சார வாகனங்களை இந்தியாவின் சந்தைப்படுத்துவதற்கு முன்னதாக இறக்குமதி வரியை குறைக்குமாறு டெஸ்லா நிறுவனம் பிரதமர் அலுவலகத்தை வலியுறுத்தியுள்ளது.
மின்சார கார்கள் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் விதிக்கப்படுவதாகவும் இதுவே டெஸ்லா கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய பெரும் தடையாக இருப்பதாகவும் டெஸ்லா தெரிவித்திருந்தது.
மேலும் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இவ்விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கும் நிலையில் பிரதமர் அலுவலகத்தை நேரடியாக நாடிய டெல்ஸா நிறுவனம் இறக்குமதி வரியை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளது.