காங்கிரசின் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு துவங்கியது.. முதல் நாளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரை

பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்பின் தவறான கொள்கையால் நாட்டில் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரசின் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு துவங்கியது.. முதல் நாளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரை

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி, தற்போது நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்துகிறது. அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய சோனியா காந்தி, நாட்டில் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினார்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மத்தியில் ஆளும் பாஜகவினரால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சாமான்ய மக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தி பிளவுபடுத்த பாஜக அரசு முயற்சி செய்கிறது என்று சாடினார். மூன்று நாட்கள் நடைபெறும் சிந்தனை அமர்வு கூட்டத்தின் இறுதி நிகழ்வில் ராகுல்காந்தி உரையாற்ற உள்ளார்.