
மேற்கு வங்க மாவட்டம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள போக்டூய் கிராமத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கொல்கொத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேற்று சிபிஐ போலீசார் அந்த கிராமத்தில் விசாரணையை தொடங்கினர்.
இரண்டாவது நாளாக இன்று சிபிஐ ஐ.ஜி பாரத் லால் மீனா தலைமையிலான போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் முறையாக விசாரணை நடத்தக் கோரி ஏராளமான பொதுநல வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில் கொல்கொத்தா உயர்நீதிமன்றம் தாமாக முனவந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.