அந்த ஒத்த பதவிக்கு குறிவைக்கும் பாஜக... தரமறுக்கும் ரங்கசாமி!! அஷ்டமி நவமியால் தடைபடும் பேச்சுவார்த்தை...

அந்த ஒத்த பதவிக்கு குறிவைக்கும் பாஜக... தரமறுக்கும் ரங்கசாமி!! அஷ்டமி நவமியால் தடைபடும் பேச்சுவார்த்தை...

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தாலும், இன்னும் அங்கு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.. இதற்கு காரணம் கேட்டால் ஆளுக்கொருபதில் சொல்கிறார்களே தவிர அதற்கு சரியான காரணம் தலைமைகே தெரியவில்லை எனகூறப்படுகிறது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மே 7ஆம் தேதி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து எம்.எல்.ஏ,கள் மற்றும் நியமன எம்.எல்.ஏ,கள் கடந்த 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால் புதுச்சேரி அரசியல் இன்னும் முழுமையடையவில்லை. 

எனவே அமைச்சர்கள் பதவியேற்காமல் இருப்பது குறித்து பாஜக தரப்பிடம் கேட்ட போது, தற்போதையான முதல்வர் ரங்கசாமி 6 அல்லது ஒருவருடம் மட்டுமே புதுச்சேரி முதல்வராக இருக்க வேண்டும் என முன்னதாகவே பேசிமுடிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், பாஜகவுக்குத் துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள், சபாநாயகர் அல்லது துணைச் சபாநாயகர் பதவிகளைக் கேட்கப்பட்டது. 

ஆனால் இதற்கு ரங்கசாமி பதில் எதுவும் கூறாமல் பின்வாங்கினார். அதன் பிறகு பாஜக தலைவர்கள் துணை முதல்வர் பதவி வேண்டாம், மூன்று அமைச்சர்கள், பொதுப்பணித்துறை, நிதி, உள்துறை, சுகாதாரத் துறை உட்பட சில துறைகளைக் கேட்டனர்.


பின்னர் புதுச்சேரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ரங்கசாமியின் அழைப்பை ஏற்று பேச வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் ஒரு நாள் முழுவதும் காக்கவைக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த அவர்,  அமித்ஷாவைத் தொடர்புகொண்ட நிர்மல், ரங்கசாமியின் செயல்களைப் பற்றியும், தன்னை காலையிலிருந்து காத்திருக்க வைத்ததைப்பற்றியும் தெரியப்படுத்தினார். பின்னர் அவரை பாஜக தலைமை டெல்லிக்கு திரும்பக்கூறியது.

தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும் பதவியேற்ற பின் ஒரு பேச்சும் பேசிய முதல்வர் ரங்கசாமி, ராஜ்யசபா சீட் கேட்கும் பாஜகவின் ஆசையை மறுத்துள்ளார். எனினும், மூன்று அமைச்சர் பதவி கொடுக்க அவர் தயாராக இருந்தாலும், முக்கிய இலாக்காக்களை பாஜகவினர் கேட்பதால் மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார் முதல்வர் ரங்கசாமி என என்,ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 

இந்த நிலையில், அனைத்து பிரச்சனையும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும் அஷ்டமி நவமி என்பதால் பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது என கூறுகிறது ஒரு தரப்பு….