நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை இரு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு.!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்காளாக நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை இரு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு.!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை உபி பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதே பட்ஜெட் தொடர் இருக்கட்டங்களாக நடத்தப்படுவதற்கு  காரணமாகும்.

ஜனவரி 31 ஆம் தேதி குடியரசு தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் முதல்  சீசன் தொடங்குகிறது.
 
அதை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் சார்பில் 2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து  குடியரசு தலைவர் உரை மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இரண்டாவது கட்டமாக மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தேர்தல் நடைபெற உள்ள 5  மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ,புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு  சலுகைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.