கங்கனாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - அமைச்சர் நவாப் மாலிக்

சர்ச்சை பேச்சால் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமானப்படுத்திய நடிகை கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கங்கனா, இந்தியாவுக்கு 2014-ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும், 1947-ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான் என்று இந்தியாவின் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இது பல்லேறு தரப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக், இமாச்சல பிரதேசத்தில் பிரத்தியேகமாக வளரும் மலானா க்ரீம் என்னும் போதைப்பொருளை கங்கனா அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டது போல் தெரிவதாக கூறினார்.

நாட்டுக்காக போராடி சுதந்திம் பெற்று தந்த வீரர்களின் தியாகத்தை கங்கனா அவமானப்படுத்தியுள்ளதாகவும், எனவே, அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.