தமிழக அரசின் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் - கர்நாடக முதல்வர்!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று மாநில சட்டத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் - கர்நாடக முதல்வர்!!

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கர்நாடக மாநில எம்.பி  எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற இணை அமைச்சர் அஸ்வினி குமார், மேகதாது அணை குறித்து மத்திய நீர் வள அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் அணை தொடர்பான திட்ட அறிக்கையை ஏற்ற பிறகே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழக அரசின் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.