அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்ப்பு தொடர்பான விவரங்களை வெளியிட்டது இந்திய விமானப்படை!!

அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்ப்பு தொடர்பான விவரங்களை வெளியிட்டது இந்திய விமானப்படை!!

4 ஆண்டுகளுக்கு மட்டும் இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் இணையும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விமானப்படையில் இணைவதற்கான வழிமுறைகளை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

அதன்படி பணிக்காலத்தின்போது 48 லட்ச ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும் எனவும் 18 வயதுக்குட்பட்டவர்களும் இதில் இணையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ராணுவத்தினருக்கான உயர்தர ஆன்லைன் தரவுத்தளம் பராமரிக்கப்பட்டு அதில் ஒவ்வொருவரின் தனித்தன்மை குறித்து விவரங்கள் குறிப்பிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மருத்துவ விடுப்பும் உண்டு என கூறப்பட்டுள்ளது. 4 ஆண்டு முடிவதற்குள் ராணுவத்தினர் தங்கள் சொந்த கோரிக்கையின்படி விடுவிக்கப்பட மாட்டார்கள் எனவும், இருப்பினும் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.