பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரைவில் ஒப்புதல்...

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரைவில் ஒப்புதல்...

கொரோனா பரவலை தொடர்ந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள தடுப்பூசி செலுத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் 73 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் பூஸ்டர் ஷாட் செலுத்தும் நடைமுறை தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தடுப்பூசி செலுத்தியோருக்கான நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டதில், இரு டோஸ் செலுத்தியவர்களின் நோய் எதிர்ப்பு திறன் 5 அல்லது 6 மாதங்களில் 50 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வசதிக்காக பூஸ்டர் டோஸினை செலுத்த ஐசிஎம்ஆர் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.