நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.
எதிர்கட்சிகள் தொடர் அமளியால் முடங்கியது பார்லி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. கடந்த 18ம் தேதி துவங்கிய மழைக்கால கூட்ட தொடர் இன்றோடு 16 நாட்கள் நடைபெற்றது.
முன் கூட்டியே அவையை முடிக்க எம்பிக்கள் கோரிக்கை
இந்நிலையில் வட மாநிலங்களை சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் கூட்டத்தொடரை இன்றைய தினமே முடித்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு இருவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரை இன்றோடு முடித்துக் கொள்வதாக அவையில் கூறினார். இதனையடுத்து "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்-2022" திட்டமிடப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே நிறைவு பெற்றது.
கோரிக்கையை ஏற்று அவைகள் ஒத்திவைப்பு
முன்னதாக மின்சார திருத்த சட்ட மசோதா-2022 உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதத்திற்கும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.