குஜராத்: நிலநடுக்கத்தின் நினைவிட மணிமண்டபத்தை திறந்து வைத்தார் பிரதமர் !

குஜராத்: நிலநடுக்கத்தின் நினைவிட மணிமண்டபத்தை திறந்து வைத்தார் பிரதமர் !
Published on
Updated on
1 min read

குஜராத்தின் புஜ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள  நினைவு மண்டபத்தை திறந்து வைக்க அங்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வளர்ச்சி திட்டப்பணிகள்:

குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். 

மீண்டும் சுற்றுப்பயணம்:

இரு நாள் பயணமாக நேற்று மீண்டும் குஜராத் சென்ற பிரதமர் மோடி, அகமதாபாத்தில் காதி உத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராட்டையில் நூல் நூற்றதோடு, சபர்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட அடல் பாலத்தையும் திறந்து வைத்தார். 

உற்சாக வரவேற்பு:

இந்த நிலையில் இன்று புஜ் நகர் சென்ற மோடி, ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 
 
நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் திறந்து வைப்பு:

அதைத்தொடர்ந்து புஜ் நகரில் உள்ள ஸ்மிருதிவனம் சென்ற அவர், 2001ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடன் இருந்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com