ஸ்மார்த்த பிராமணர்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!!

அத்வைத தத்துவத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்த பிராமணர்களை தனி மதப் பிரிவாக அறிவித்து அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மனு:
அத்வைத தத்துவத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்த பிராமணர்கள் அவர்களை தனி மதப் பிரிவாக அறிவித்து அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
சென்னை உயர்நீதிமன்றம்:
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஸ்மார்த்த பிராமணர்கள் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்த பெயரிலோ பொதுவான அமைப்பு எதுவும் இல்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு ஜூன் மாதம் மனுவை நிராகரித்தது.
விளக்கம்:
"இது ஒரு சாதி/சமூகம் என அவர்களை குறிப்பாகக் குறிக்காமல், தமிழ்நாட்டின் பிற பிராமணர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தும் விதமாக மட்டுமே உள்ளது" என்று கூறி உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.
மேல்முறையீடு:
தங்களின் மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் வசிக்கும் ஸ்மார்த்த பிராமணர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் எஸ் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது.
நிராகரிக்க காரணம்:
பலர் அத்வைத தத்துவத்தை பின்பற்றுவதால், மனுவை அனுமதித்தால், "சிறுபான்மையினரின் தேசம் மட்டுமே நமக்கு இருக்கும்" என்று உச்சநீதிமன்றம் கூறியது.
-நப்பசலையார்