புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவதாக வழக்கு... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவதாக வழக்கு... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

எதிர்கட்சிகள் மீது புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

எதிர்கட்சிகள் மீது புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. முன்னதாக பாஜக தன்னை எதிர்க்கும் எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கிலும் தங்களது திட்டங்களுக்கு அரசியல் கட்சியினரை பணிய வைக்கும் நோக்கிலும் புலனாய்வு அமைப்புகளான  வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்ச்சாட்டி வந்தன.  

ஆகையால் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் என கோரி உச்ச நீதி மன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவானது இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.