பாஜக மதவெறியர்களின் பேச்சுக்கு இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? - தெலங்கானா அமைச்சர் கேள்வி!

பாஜக மதவெறியர்களின் வெறுப்பு பேச்சுக்கு, இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெலங்கானா அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மதவெறியர்களின் பேச்சுக்கு இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? - தெலங்கானா அமைச்சர் கேள்வி!

உத்தரப்பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா, முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இருப்பினும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குவைத், ஈரான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கத்தார் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தநிலையில் பாஜகவினரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலங்கானா அமைச்சர் கே. டி.ராமாராவ், பாஜக மதவெறியர்களின் செயலுக்கு ஒட்டுமொத்த நாடு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு, மத்திய அரசே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.