இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா... எதற்காக தெரியுமா..?

கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா... எதற்காக தெரியுமா..?
Published on
Updated on
1 min read

கொரோனா முதல் அலையின் போது, பெரிய அளவு பாதிப்புகளை சந்திக்காத இந்தியா கொரோனா உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால் 2வது அலையின்போது ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக, தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் பல நாடுகளில் குறையாது இருப்பதால், தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா தொடர வேண்டும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குவாட் உச்சி மாநாட்டிலும்,  உலக கொரோனா ஒழிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என  சொல்லப்படுகிறது.

இதனிடையே நடப்பு மாத இறுதியில் அமெரிக்க செல்லும் மோடி, 76வது ஐநா பொது சபை கூட்ட விவாதத்திலும் பங்கேற்கிறார். அப்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com