
விஜயவாடா பகுதிகுட்பட்ட பகுதியில் மின் கசிவு காரணமாக சுற்றுலா பேருந்து ஒன்று எரிந்து சாம்பலாகி போனது.அதிர்ஷ்டவசமாக அந்த பேருந்தில் பயணித்த 24 பயணிகளும் உயிர் தப்பினர் .
மேலும் படிக்க | கார்த்திகை 2-வது சோமவாரத்தில் புனித நீராடிய சுமங்கலிகள்...
ஆந்திர மாநிலம் விஜயவாடா சமீபத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஏராளமான அளவில் சுற்றுலா பயணிகள் தினமும் செல்வது வழக்கம்.இயற்கை அழகை ரசிப்பதற்காக அங்கு தினமும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று இரவு அரக்கு பகுதியில் தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு 24 பயணிகள் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.அவர்கள் பயணித்த பேருந்து விஜயநகரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது மலைப்பாதையில் திடீரென்று தீப்பற்றி எறிய துவங்கியது.
எனவே பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் பேருந்து முழுவதுமாக எரிய துவங்கியது. எனவே பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி உயிர்த்தப்பினார். ஆனால் பயணிகளின் உடைமைகளும் தீக்கிரையாகி விட்டன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாகி விட்டது.தீ விபத்திற்கான காரணம் மின்கசிவு ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.