கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி!!

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி!!

மத்திய ஒளிபரப்புத்துறை செயலாளர் தலைமையிலான பத்திரிகையாளர் நலக்குழு கூட்டத்தில், மறைந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி 1 கோடியே 81 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க இக்குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதில் கொரோனா பாதித்து உயிரிழந்த 16 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கும் 5 லட்ச ரூபாய் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து கொரோனாவால் உயிரிழந்த 139 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.